1.வல்லஇயேசுகிறிஸ்துநாதா, நல்லநேசமீட்பர்நீர்; பற்று, பாசம், கட்டுமுற்றும் அற்றுப்போகப்பண்ணுவீர். 2.அருள்ஜோதிதோன்றிடாமல், இருள்மூடிக்கிடந்தோம்; திக்கில்லாமல்பாவப்பற்றில் சிக்கிக்கொண்டேஇருந்தோம். 3. பக்திஒன்றுமில்லை, பாரும், சக்தியற்றுப்போயினோம்; ஜீவபாதைசென்றிடாமல் பாவபாதைநடந்தோம். 4. இயேசுநாதரே, இப்போது நேசமாகநிற்கிறீர்; “என்னைநம்பு, பாவம்நீக்கி உன்னைக்காப்பேன்” என்கிறீர். 5. நம்பிவந்து, பாவநாசா, உந்தன்பாதம்அண்டினோம்; தூயரத்தம்பாயக்கண்டு, தீயசெய்கைவெறுத்தோம். 6.பாவச்சேற்றிலேவிழாமல் தேவரீரேகாத்திடும்; வல்லஆவியாலேஎன்றும் வெல்லச்செய்துரட்சியும்.